"எஸ்.ஐ முதல் டி.எஸ்.பி வரை ரோந்து பணியின்போது கைதுப்பாக்கி வைத்திருப்பது அவசியம்" - ஏ.டி.ஜி.பி அறிவுறுத்தல்
ரோந்து பணி செல்லும் காவல் உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள், டி.எஸ்.பிக்கள் கைதுப்பாக்கி வைத்திருப்பது அவசியம் என புதிதாக பொறுப்பேற்றுள்ள சட்டம் ஒழுங்கு கூடுதல் ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தியுள்ளார்.
உயர் அதிகாரிகளுடான ஆலோசனை கூட்டத்தில், எந்த நேரத்தில், எப்படி துப்பாக்கியை பயன்படுத்தவேண்டும் என்ற பயிற்சி போலீசாருக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
Comments